கட்டற்ற தமிழ் மென்பொருட்கள்

தமிழ் கட்டற்ற மென்பொருட்கள் அடங்கிய தமிழா! குறுந்தட்டு பதிப்பு 2.0 இன்று தமிழா மென்பொருள் குழுவால் வெளியிடப்படுகிறது.

தமிழ் கட்டற்ற மென்பொருட்களை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் தமிழா குறுந்தட்டு வெளியிடப்படுகிறது. இதன் முதல் பதிப்பு 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. அதன் தொடர்சியாக இன்று 9 வருடம் கழித்து இரண்டாம் பதிப்பு இணையம் வழியாக வெளியிடப்படுகிறது. இனி இந்த குறுந்தட்டு தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்பட்டு வெளியிடப்படும்.

இந்த குறுந்தட்டை இந்த சுட்டியில் பதிவிறக்கிக்கொள்ளலாம்

இந்த குறுந்தட்டில் கீழேயுள்ள மென் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன (அனைத்தும் விண்டோஸ் கணினிகளில் மட்டும் இயங்கக் கூடியது) ;

 1. எ-கலப்பை பதிப்பு 3.1 dev - வின்டோஸ் இயங்குதளங்களில் தமிழ் தட்டச்சு செய்ய உதவும் மென்பொருள்.
 2. பயர்பாக்ஸ் தமிழ் பதிப்பு 18.0 - தமிழ் இடைமுகம் கொண்ட பயர்பாக்ஸ் இனைய உலாவி
 3. மனிமேனேஜர்EX பதிப்பு 0.9.9.0 - தமிழ் இடைமுகம் கொண்ட நிதி மேலான்மை செயலி. தமிழ் இடைமுகத்திற்கு, இந்த செயலியை நிறுவும் போது மொழி என்ற பகுதியில் தமிழ் என்று தேர்ந்தெடுக்கவும்.
 4. தமிழ் யூனிகோட் எழுதுருக்கள் பொதி - அழகிய 17 தமிழ் யூனிகோட் கட்டற்ற எழுத்துருக்கள் அடங்கிய பொதி.

இதில் கீழேயுள்ள 17 கட்டற்ற உரிமத்தில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள் சேர்கப்பட்டிருக்கின்றன.

 1. 1094_ChemmozhiComic.ttf
 2. 1094_ChemmozhiParanar.ttf
 3. 1094_ChemmozhiThendral.ttf
 4. 1094_ChemmozhiThenee.ttf
 5. 1094_ChemmozhiTimes.ttf
 6. 1094_ChemmozhiVaigai.ttf
 7. TAMUni-Tamil150.ttf 1.0
 8. TAMUni-Tamil042.ttf 1.0
 9. Uni-Tamil150.ttf 1.0
 10. TAMUni-Tamil195.ttf 1.0
 11. TABUni-Tamil032.ttf 1.0
 12. TABUni-Tamil021.ttf 1.0
 13. TAMUni-Tamil046.ttf 1.0
 14. Uni-Tamil042.ttf 1.0
 15. Uni-Tamil195.ttf 1.0
 16. Uni-Tamil046.ttf 1.0
 17. Lohit-Tamil.ttf

இந்த குறுந்தட்டு கோப்பு பயன்படுத்துவதில் எந்த கட்டுகளும் இல்லை மற்றும் இலவசம். நீங்கள் தமிழா குறுந்தட்டை பதிவிறக்கி பயன்படுத்துவதோடல்லாமல் மற்றவர்களுக்கும் பிரதியெடுத்து கொடுத்து உதவுங்கள்.

மற்ற நிறுவனங்களும் வேண்டிய பிரதிகளை உருவாக்கி பொதுமக்களிடம் கட்டற்ற மென்பொருட்கள் சென்றடைய வழி செய்யலாம்.