கட்டற்ற தமிழ் மென்பொருட்கள்

தமிழா! - எகலப்பை பதிப்பு 3.0.3 இன்று (29-05-2015) வெளியிடப்பட்டது.

இந்தப் பதிப்பிலுள்ள மாற்றங்கள் சில:

  1. புதிய Qt 5.4.1 மென்பொருளைக் கொண்டு இந்த பொதி உருவாக்கப்பட்டது. இது சில விண்டோஸ் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கும் என்று நம்புகிறோம்.
  2. விண்டோஸ் 8.1 பதிப்பிலுள்ள shift விசை பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது.

மேல் விபரங்களுக்கு: https://github.com/thamizha/ekalappai/releases/tag/3.0.3

இந்த பதிப்பை நம் தமிழா தளத்திலிருந்து பதிவிறக்கிக்கொள்ளலாம்.

எகலப்பை பயன்படுத்துவதில் ஏதும் பிரச்சனை இருந்தால் அவற்றை நம் கிட்கப் தளத்தில் (https://github.com/thamizha/ekalappai/issues) பதிவு செய்யவும்.

எகலப்பை பயன்பாடு பற்றிய உங்கள் கருத்துக்களை சந்தேகங்களை தமிழா முகநூல் குழுவிலும் கேட்கலாம். நம் தன்னார்வலர்கள் உங்களுக்கு உதவுவர்.
தமிழா! முகநூல் குழுவின் முகவரி: https://www.facebook.com/groups/thamizha.oss/