கட்டற்ற தமிழ் மென்பொருட்கள்

நுட்பம் நம் மொழியில் தழைக்க - தமிழா திட்டங்களில் பங்களிக்க...

நீங்கள் பல வழிகளில் தமிழா திட்டங்களில் பங்களித்து உதவு முடியும்.
கீழ்க்கண்ட சில வழிமுறைகளில் பங்களிக்கலாம்..

  • நீங்கள் ஒரு நிரல் எழுதுபவரா ? அப்படி எனில் ஏற்கனவே உள்ள தமிழா திட்டங்களில் பங்களித்து உதவலாம் (அ) வழு நீக்கல் வேலைகளிலும் பங்குப்பெற்று உதவலாம்.
    https://github.com/thamizha பக்கத்தை பார்க்கவும்
  • நீங்கள் தமிழா திட்டங்களை ஏற்கனவே பயன்படுத்தி, அது உங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி உங்களுடைய வலைப்பூவில் பதியலாம், முகநூல் (அ) டிவிட்டரில் பகிரலாம்.
  • நீங்கள் பயன்படுத்திய தமிழா திட்டங்களில் பிழைகள் ஏதேனும் அறியப்பட்டால், தமிழா குழுவிற்கு வழுப்பற்றிய தகவலை தகுந்த பக்கத்தில் தெரியப்படுத்தலாம்.
  • மேலும் தன்னார்வம் கொண்டு தமிழா திட்டங்களைச் சோதித்து, அதில் அறியப்படும் வழுக்களை தெரிவித்து உதவலாம்.
  • உங்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கணினியில் தமிழா மென்பொருட்களை நிறுவி பயன்படுத்தக் கற்றுத் தரும் பணியைச் செய்யலாம்.

சமூகத்தில் இணையவும்

(நாங்கள் கண்டிப்பாக ஸ்பேம் மடலை அனுப்ப மாட்டோம்!)